ராகம் தேடும் வானம்பாடிகள், மண்மணம் கமழும் பாண்டி குடும்ப கதைகளில் ஒன்று. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை புவியியல் ஆதாரமாக வைத்து, அதனைச் சுற்றியுள்ள, பேரூராட்சி, ஊராட்சி, சிற்றூர்களைக் கதை மாந்தர்களின் வசிப்பிடமாக வைத்து, உறவுமுறை, சொந்தங்களைப் புனைந்துள்ளேன்.
மானூத்துப்பட்டி என்ற கிராமத்தை, பூர்வீகமாகக் கொண்டு, அந்த பகுதியில் செல்வாக்கோடு வாழ்பவர்கள் பாண்டிக் குடும்பத்தினர். அவர்கள் பங்காளிகள், சம்பந்த புறம் உறவுகள், பழக்கவழக்கம் ,வாழ்வியல் என விரிவதே கதை.
பாண்டி குடும்பத்தை ஆதாரமாக வைத்து முதலில் புனையப்பட்டது மனச தாடி என் மணிக்குயிலே .அதனைத் தொடர்ந்து, அதன் இரட்டை கதையாக, சமகாலத்தில் நடக்கும், " தான்வி கல்யாண வைபோகமே" கதையை எழுதினேன்.
பாண்டிக் குடும்பம், மேலும் பல தொடர்கள் எழுதும் வாய்ப்பு உள்ள கதையாகவே அமைந்தது. அதனால் அதன் மூன்றாம் பாகமாக " மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே" என்ற மூன்றாவது புனைவையும் கொடுத்தேன். இந்த மூன்று கதைகளுமே வாசகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. பொதுவாக இந்த கதைகளை, தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ வாசிக்கலாம் .ராகம் தேடும் வானம்பாடிகளையும் அந்த வரிசையில் வருவது தான். கதையின் நீளம் கருதி, இரண்டு பாகமாக பதிப்பிக்கின்றேன்.