ராச ராசசோழன் மன்னர்களில் ஒரு மாமணி , அரசர் குலத்திலகம், வாராது வந்த வைரமுத்து,, வையத்தை விடிவிக்க வந்த வான் நிலவு என்றெல்லாம் சிலர் போற்றுகின்றனர் சிலருக்கு இவன் தமிழ்த்தேசியத்தின் சின்னம், தமிழர்களின் புகழ் பரப்பியவன்; பிற்கால சோழப்பேரரசை வலுவான அடிதளத்தில் அமைத்திட்ட ஆதவன் .
· ஆனால் நம்மைப் பொறுத்தவரை அவன் உலகில் தோன்றிய மன்னர்களில் ஒருவன். . மன்னன் என்றால் என்ன? மக்களைச் சுரண்டுபவன் மக்களை அதிகமாகச் சுரண்டுபவன் மாமன்னன்.. பேரரசன் என்றால் ,சக்கரவர்த்தி என்றால் மக்களைக் கடுமையாகச் சுரண்டியதுடன் நில்லாமல் அவர்களைக் கொடுமையாகத் துன்புறுத்தியவன் என்று பொருள்.. ஒன்று தன்னுடைய நாட்டு மக்கள் மீது தாங்க முடியாத வரிகளை விதித்து கொடுமைப்படுத்தி இருப்பான். இரண்டாவது அயல் நாடுகள் மீது படை எடுத்து அவர்களைக் கொன்று குவித்து, பெண்களை மான பங்கம் செய்து நாட்டைக் கொள்ளை அடித்திருப்பான். இதை எந்த மன்னன் சிறப்பாகவும் தொடர்ச்சியாகவும் செய்தானோ அவன் மன்னர்களின் மாமணி ! இதுதான் வரலாற்று உண்மை . அந்த மன்னன் தமிழன் என்ற காரணத்தால் இந்த உண்மை ,அடிப்படை மாறிவிடப் போவதில்லை. .ராச ராசசோழன், சந்திரகுப்தன் , மகா அலெக்ஸாண்டர், செங்க்கிஸ்கான் ஜார் மன்னன், கிருஸ்ண தேவராயன் இவர்களுக்குள் அடிப்பபடையில் எந்த வேறுபாடும் கிடையாது விழுக்காட்டு அளவில் கொடுமைகளின் அளவு வேறுபடலாம் . தமிழன் என்ற காரணத்திற்காக ராச ராசசோழனுக்கு 1000ஆம் விழா எடுத்து, ,ஆண்டு தோறும் அவனுக்கு சதய விழா எடுக்கும் போது நாம் இந்த் "சிறப்புகளுக்கும்" சேர்த்தே விழா எடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.