ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் இந்தியநாடு கண்ட மிகப்பெரும் ஞானி. சிறிய கிராமத்தில் அவதரித்து இளவயதிலேயே இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவர். காளிகோவில் பூசாரியாகிக் காளியின் தரிசனம் பெறத் துடித்து அழுது, அலறி, அரற்றி, கொஞ்சி, கெஞ்சி முயற்சி செய்து நிற்கையில், பலரின் பரிகாசத்திற்கும் ஏளனத்திற்கும் ஆளாகியும் எதற்கும் கவலைப்படாமல் தனது ஒரே குறிக்கோளில் விடாப்பிடியாக இருந்தார். பலவாறு வேண்டியும் காளி தரிசனம் கிட்டாமல் மிகவும் மனம் வெறுத்து உயிர்தரிக்க விரும்பாது சிலையின் கையில் இருந்த வாளை எடுத்துத் தனது தலையை வெட்டிக்கொள்ள முயற்சி செய்யும்போது காளி அவருக்குக் காட்சிதந்தாள். காளியைத் தொட்டு, விளையாடி, பேசி, கொஞ்சி அவளுக்கு உணவூட்டிப் பலவாறும் மகிழ்ந்தார். அவளுடைய ஆக்ஞைப்படி சனாதன மதத்து பிரிவுகளில் கூறப்பட்டுள்ள வெவ்வேறு முறைகளையும் அனுட்டித்து அவையனைத்தும் கூறுபவை உண்மையென்று கண்டறிந்தார். வாத்சல்யபாவம், நாயக நாயகிபாவம், தாசியபாவம், சாக்கியபாவம் மற்றும் தந்திரசாதன முறை மூலமும் இறைவனை அடையலாம் என்ற உண்மையைக் கண்டறிந்தார். பைரவி பிராம்மணி, சடாதாரி, தோதாபுரி முதலியோரைக் குருவாகப் பெற்றிருந்தார்.
மேலும், இசுலாமிய, கிறித்தவ, சீக்கிய, சமண மற்றும் பௌத்த சமயங்களை அனுட்டிப்பது மூலமும் இறைவனைக் கண்டறியலாம் என்று அவற்றை அனுட்டித்து உணர்ந்தார்.
மணம் புரிந்தும் மனைவியை இறைவியாகக் கருதி பூசை புரிந்து குரு-சீட உறவை அனுட்டித்து அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து காட்டினார். நிறைய இளைஞரை சீடராக்கி அவர்களுக்கு சேவை மற்றும் தொண்டு செயக்கூறி அதன்மூலம் இறையருளைப்பெற அறிவுறுத்தினார்.
சனாதனத்தில் மூடநம்பிக்கை, பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், வகுப்பு வேறுபாடு முதலிய தீய பழக்கவழக்கங்கள் இருக்கிறதென்று கூறி மதமாற்றம் செய்துவந்த காலத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் அவரது சீடர்கள் சனாதன தருமத்தைக் காப்பாற்றினர். சுவாமி தயானந்த சரஸ்வதி, இராஜாராம் மோகன்ராய் மற்றும் பலரும் அவ்வப்போது தோன்றிவில்லையேல் இந்நாள் இந்நாட்டில் சனாதனத்தை அனுட்டிப்பவர் எவரும் இருந்திருக்க மாட்டார்கள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners