இந்த புத்தகம் தமிழ் கவிதைகளை உள்ளடக்கியது.இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் ஆசிரியரின் சொந்த கருத்தாகும்.மனித வாழ்வில் ஒவ்வொரு சூழலிலும் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மனித உறவின் தேவைகள் பற்றியும் கவிதைகள் புனையப்பட்டுள்ள.மனிதரை உக்கப்படுத்த(MOTIVATE) தேவையான காரணிகள் பற்றியும் கவிதைகள் புனையப்பட்டுள்ளன.இந்த புத்தகம் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி அன்புடன்
ஆ.தியோடர் ராயன்.
திருச்சி – 620001.
இந்த புத்தகத்தின் ஆசிரியர்
திரு.ஆ.தியோடர் ராயன் தமிழில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார். அவரின் கவிதைகள் அடங்கிய இந்த புத்தகத்தில் சிறந்த ஊக்குவிப்பு கவிதைகளை படைத்துள்ளார்.
ஆசிரியர் பன் மொழி புலமையும் படைப்பாற்றலும் கொண்டவர். ஆசிரியரின் கருத்துகள் இளைஞர்கள்,முதியவர்கள் மற்றும் பெண்கள் என எந்த பேதமும் இன்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடியதே.
நூலின் ஆசிரியர் திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்காவில் உள்ள கருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். கருங்குளம்,திருச்சி மற்றும் சென்னையில் தனது படிப்பை முடித்தவுடன் கணினி துறையில் சில காலம் வேலை செய்து வந்தார்.
அதன் பின் சில காலம் ஐக்கிய அமெரிக்க நாட்டிற்க்கும்(USA),பிரிட்டன் தேசத்திற்கும்(UK) சென்று பணி செய்து நாடு திரும்பினார்.
தனது தமிழ் மொழி ஆர்வத்தால் புதிய படைப்புகளை படைத்து வருகிறார்.