ஒரு எழுத்தாளனின் ஒவ்வொரு ஆக்கமும் கிட்டத்தட்ட பிரசவம் மாதிரிதான். அவன் மூளையில் மின்னலென கதையின் கரு உதயமாகிவிட, அதன் பிறகு அவன் படும் அவஸ்தைகள் ஏராளம். விறுவிறுப்பான தொடக்க வார்த்தைகள், தெளிந்த நீரோடை மாதிரி வளைந்து நெளிந்து செல்லும் மையப்பகுதி, நெத்தியடியான கடைசி வாக்கியம் என்று அவனுக்குள் எண்ணங்கள் கூழாங்கற்களை போல உருண்டு கொண்டே இருக்கும். எல்லாம் சரியாக அமைந்துவிட்ட வேளையில் அது எழுத்து வடிவம் பெற்றுவிடும்.
அதை அவன் வாசகர்கள் பாராட்டிச் சொல்லும்போது ஒரு தாயைப்போல அவன் மகிழ்ந்து போகிறான்.
இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் வேறு வேறு களங்களில் நடப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். .
முதல் ஐந்து அத்தியாயங்களும் உங்களுக்கு நிச்சயம் நகைச்சுவை விருந்து அளிக்கும்.
எதிரும் புதிரும் என்கிற கதையில் இன்றைய காலகட்ட கணவன் மனைவிமார்களுக்கு இடையே எழும் முரண்பாடுகளை எடுத்து காட்டுகிறது.
ரெண்டும் ஒன்னு என்கிற கதை உங்களை நிச்சயம் சிந் திக்க வைக்கும்.
தலைச்சன் மற்றும் சந்தோஷத் தீவு என்கிற கதைகள் எதிர்காலச் சூழலைச் சொல்லி உங்களை இக்கால சீர்கேட்டை சிந்திக்க வைக்கும்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners