வாழ்க்கையின் வலியும், வேதனையும் நம்மை மரணத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. பால்யத்தில் பெற்றிருந்த சிறகுகளை சமூகம் பறித்துக் கொள்கிறது. ஒவ்வொரு விடியலும் துயரச் சிலுவையை பரிசளிக்கிறது. வாழ்க்கையில் எப்போது வசந்தம் வீசும் என்று முள்படுக்கையில் படுத்தபடி யோசிக்கிறேன். வாழும் வரை வலையில் சிக்கிய மீன்களாகத்தான் இருக்க வேண்டியதை எண்ணி நான் நாட்களை கடத்துகிறேன்.