பாண்டி குடும்பம் , எழுத்தாளர் தீபா செண்பகம் அவர்களால் ,மதுரை வட்டார வழக்கில் இணையத்தில் எழுதப்பட்ட தொடர் . ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வாழ்வியலை , நான்கு தலைமுறை கதாபாத்திரங்களோடு, விவரிக்கும் முழு நீள குடும்ப சித்திரம் பாகங்களாகத் தொடர்கிறது. இந்த தொடர்களைத் தனிக் கதைகளாகவும் வாசிக்கலாம்.
பாண்டி குடும்பம் in …மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே , மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, ராகம் தேடும் வானம்பாடிகள் ஆகியவை, இணைய புத்தகமாக உள்ளது.
தான்வி கல்யாண வைபோகமே,
பாண்டி குடும்ப வாரிசான தங்க பாண்டியன் , IPS அதிகாரியாக வட இந்தியாவில் பணி புரிகிறான். லபாசனவில் தன்னோடு ஒன்றாகப் பயிற்சி பெற்ற IAS தான்வியை மணமுடிக்க விரும்புகிறான். சாதீய கட்டுப்பாடுகளில் ஊறிய பாண்டி குடும்பம், இவர்களின் கலப்பு மணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் பிரிந்து,அவரவர் பணியைத் தொடர்கின்றனர். மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இருவரும் பணி நிமித்தமாக போபாலில் ஒரே மிஷனில் இணைகின்றனர். ஆபீசர் ஜோடி பணியில் உள்ள சவால்களை எப்படி எதிர்கொள்கின்றனர். வாழ்வில் இணைவார்களா, பாண்டி குடும்பம் இவர்கள் திருமணம் சம்மதிப்பார்களா , கேள்வியோடு தொடர்கிறது, தான்வி கல்யாண வைபோகமே.