நாம் ஏன் பிறந்தோம் என்பது பற்றி நாம் சிந்திப்பது இல்லை யாருக்கும் நாம் நன்றியும் சொல்வதில்லை.சில அன்பான உறவுகளையும் நாம் கண்டுகொள்வதுமில்லை . காசு, சொத்து, என ஓடி ஓடி நோயை தேடி மனதை தூய்மை படுத்துவதும் இல்லை.பின்னாளில் நிம்மதி வரும் வேளையில் உடல் உயிர் வாழ மருந்து தேடி ஓடுகிறது. சுயநலம் கொண்ட வாழ்க்கையில் மனிதன் கற்ற கல்வியும் சமூகத்திற்கு பயன்படுவதில்லை.இக்கவி புத்தகம் அழகான காதல் கவிதைகள்,மிக அழகாக பெண்மையும் சற்று மென்மையாக கவிபாடி ,முடிவில் நீங்கள் யார் என்ற புரிதல் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.