 
                        
                        இந்தப் புத்தகம் அனைத்து வயதினருக்கும் ஏற்ற புத்தகமாகும்.மனிதனின் வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும்.அவற்றை சமன் செய்து வாழத் தெரிந்த மனிதரே ஒரு வெற்றியாளர் ஆவார்.எனவே அவற்றை சமன்செய்து வாழ்வது எவ்வாறு என்பது பற்றி இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருவருடைய வாழ்க்கையை வெற்றிகொள்ள பின்பற்றக்கூடிய கொள்கைகள் விளக்கப்பட்டுள்ளது. தோல்வியை தவிர்க்கவும்,தோல்வியை தொடர்ந்து எவ்வாறு வெற்றி வாய்ப்பை உருவாக்குவது என கூறப்பட்டுள்ளது.
பணம் என்பது சக்தி ஆகும். பணம் சம்பாதிக்க சிறந்த முறை மற்றும் செல்வ செழிப்பு என்ன என்று கூறப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் சக்தியை எவ்வாறு அறிந்து கொண்டு அதன் சக்தியை கொண்டு மகிழ்ச்சியான வாழ்வு பெற என்ன செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நேர்மறை எண்ணங்களை உருவாக்கி,எதிர்மறை எண்ணங்களை வெளியேற்ற வேண்டும் என்றால் என்ன முறைகளை பின்பற்ற வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள்,மனதின் அற்புத சக்தி என்ன என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.இன்ப-துன்ப கோட்பாடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. கனவு காண்பது, திறந்த மனமும் புதியன கற்றுக்கொள்ள உதவும்.எனவே திறந்த மனதோடு இந்த புத்தகத்தை வாசித்து வெற்றி காண்பீர்களாக.