கருவை சுமக்கும் தாயின், தான் ஒரு உயிரை சுமக்கிறேன் என அறிந்து துளிர்ந்த முதல் துளி கண்ணீரில் இருந்து தொடங்குகிறது.
இன்பம்,துன்பம்,சிரிப்பு,அழுகை,சோகம்,கோவம், ஆச்சிரியம்,அநியாயம்,அன்பு,பிரிவு மேலும் பல சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்தையும் தாய் உணர்கிற போது குழந்தையும் அச்சுவையை சுவைக்கும் அல்லவா.
அங்கு தொடங்கி வாழ்வின் இறுதியில் நடக்கமுடியாமல் மூன்றாம் கால் முளைத்து நடந்து வாழ்வை முடிக்கும் வரை அவன் சுவைக்கும் ஒவ்வொன்றும் நிறங்களே.