You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்தியர்கள் மறந்தது சில, நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது பல. இந்த மண்ணில் பிறந்ததற்காக பெருமைப்படும் பல அம்சங்களை இந்தத் தொகுப்பில் அழுத்தம் திருத்தமாக பதிந்திருக்கிறேன்.
நான் இதுவரை வரலாற்று ரீதியாக படித்து அறிந்த வரலாற்று உண்மையையே இந்த புத்தகத்தில் தொகுத்து வழங்கி உள்ளேன்.
நமது பாரதத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்துகொள்ள நான் இந்தியாவின் பல பகுதிகளுக்கு, பல கோவில்களுக்கு சென்று ஆராய்ந்து உள்ளேன்.
பாரத தேசத்தின் பழமைமிகு வரலாற்றை நீங்கள் ஓரளவேனும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், நம் பழம்பெரும் கோவில்களுக்கு செல்லுங்கள்.. அங்குதான் அவை கற்சிலைகளாகவும், கல்வெட்டுகளாகவும், கற்தூண்களிலும், கள்சுவற்றிலும் காணக்கிடைக்கிறது.
இந்த புத்தகத்தில் , வரலாற்றில் ஆழமாக மூழ்கி, நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றை ஆராய உதவும் தொகுப்புகளை வழங்கியுள்ளேன். கடந்த காலங்கள், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கடந்த கால தவறுகளைப் பற்றி வரலாறு நமக்குக் கற்பிக்கிறது, அப்போதுதான் நாம் கற்றுக்கொள்ளவும் மேம்படுத்தவும் முடியும், ஆனால் இதுவரை நமதுபள்ளி கல்லூரிகளின் வரலாற்று புத்தகங்களில் நமது பாரத தேசத்தின் பெருமைமிகு வீரம், காதல், விஞ்ஞானம், கணிதம், அறிவியல், புள்ளியியல், பொறியியல், மேலாண்மை, போன்ற வரலாற்றை நம் முன்னோர் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு மறைத்தே வந்துள்ளனர் என்பதற்கு இப்புத்தகம் ஒரு சாட்சியாகும்.
இந்நிலை மாறி மேற்சொன்ன நம் பாரதத்தின் பெருமைமிகு வரலாற்றை இனி வரும் சந்ததியினருக்கு போதிப்போம். பாரதத்தை போற்றுவோம்.
ராசா துரியன் வழக்கறிஞர்.
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.
ராசா துரியன் வழக்கறிஞர், KARPAGAM DHURIYAN
நான்...
ராஜாராம் சாந்தி தம்பதியினருக்கு மகனாக பிறந்து வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்றேன். கடந்த காலங்களில் சினிமாவில் உதவி இயக்குனராக, இளம் குரல் என்கிற இதழில் இணை ஆசிரியராக பணிபுரிந்தேன். என்னுடைய எண்ணம், தேடல் அனைத்தும் நம் தேசத்தின் மீதிருந்த காதலால் இப்புத்தகத்தை எழுத வைத்தது.காதல் திருமணம் ஆனா பின்னர், என்னுடைய மனைவியே என்னுடைய ஒரே நம்பிக்கையும் ஆதரவுமாகி இருந்தால், எனக்கான உத்வேகமும் அவளே.
பெற்றோரும் உற்றோரும் கைவிட்ட நிலையில், நண்பர்களின் உதவியோடு சென்னையில் வீடு வாடகைக்கு துடுத்து தங்கி, அதற்கு வாடகை கொடுப்பதற்கே கஷ்ட்டப்பட்டு காலங்களில், சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல், பல இரவுகளில் ஈரத்துணியோடு படுத்து உறங்கிய நாட்கள் அதிகம். கொரோனா காலகட்டம் அது, வேலையும் இல்லாமல் இருந்து, அதன் பிறகு அந்நாட்களில் உணவு டெலிவரி வேலைக்கு சென்று இரவு முழுவதும் பல கிலோமீட்டர்கள் வண்டி ஒட்டி உணவு டெலிவரி செய்தால் அதில் கிடைக்கும் கேஷ் ஆன் டெலிவரி பணத்தில் அடுத்த நாளிற்கான உணவை தேடிக்கொள்வோம்,
பகலில் சொற்ப வருவாயுடன் வழக்கறிஞர் தொழில் சீனியர் கொடுக்கும் சிறு வருவாயை வைத்து ஏதேதோ சமாளித்தோம், அந்த சமயத்தில் என் மனைவியும் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து பணிபுரிந்ததால் சிறிது சமாளிக்க முடிந்தது.
அதன்பிறகு இந்தியன் வங்கியில் வாய்ப்பு வர என்னுடைய திறமையை கண்டு எனக்கு வாய்ப்பு வழங்கினார் என் அம்மாவிற்கும் மேலான திரு.சிந்தியா இவானோவே அவர்கள், அவரின் வழிகாட்டுதலில் திருமதி சுபாஷினி அம்மா அவர்கள் என்னை இந்தியன் வங்கியின் வழக்கறிஞராக ஆக்கினார்கள்.
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்த வழக்குகளை மிகுந்த கவனத்தோடு அணுகி விரைவில் உத்தரவுகளை பெற்று ஒவ்வொரு இடமாக முன்னேறினேன்.
அந்த சமயத்தில் சரவணா ஸ்டோர்ஸ் என்கிற மிகப்பெரிய நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ஒன்றினை ஏற்கனவே பல வழக்கறிஞர்கள் பயந்து ஒதுங்கிய வழக்கினை எனக்கு அளித்தார்கள், உயர் அதிகாரிகள் இவன் சிறுவன் இவனுக்கு வேண்டாம் என்று எச்சரித்த பிறகும் என் அம்மா சிந்தியா அவர்கள் மேற்படி வழக்கினை எனக்கு கொடுத்தார்கள்,
அதன்பிறகு பல்வேறு பெரிய பெரிய வழக்குகளை இதுநாள்வரை தமிழகம் மட்டும் இன்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நாம் நடத்தி வருவது பெருமைக்குரிய விஷயம்.
இன்றைய தினம் இந்தியன் வங்கி மட்டும் இல்லாமல், Indian Bank, Canara Bank, Karnataka Bank, Bank of Maharashtra, Indian Overseas Bank, Jana Small Finance Bank, Reliance, RBL Bank ஆகிய வங்கிகளிலும் நான் வழக்கறிஞராக உள்ளது என்னுடைய கடுமையான உழைப்பும், நேர்மைக்குமான சான்று.
ராசா துரியன் வழக்கறிஞர்.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.