1960களில் மெட்ராஸ் மாகாணத்தில் இருக்கும் பல ஜமீந்தார்களின் வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளை நடக்கிறது, இதனால் ஒட்டுமொத்த ஜமீன் குடும்பங்களும் அதிர்ந்து போய் இருக்கின்றனர். அந்த கொள்ளையனை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர், ஆனால் எதுவும் எடுபடவில்லை. இறுதியாக இந்த பொறுப்பு கர்ணன் எனும் ஒரு துப்பறிவாளனிடம் ஒப்படைக்கப் படுகிறது. இந்த இளம் துப்பறிவாளன் தனது குழுவினருடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளிலும் தேடலிலும் ஈடுபடுகிறான். இந்த தேடலில் அவன் பல்வேறு திருப்பங்களையும், மர்மங்களையும் சந்திக்கிறான்.