Share this book with your friends

Anbai Neengal Yaen Naadavillai? / அன்பை நீங்கள் ஏன் நாடவில்லை? வாழ்க்கை கவிதை தொகுப்பு

Author Name: Anbudan Miththiran | Format: Paperback | Genre : Poetry | Other Details

பல நாள்கள் தவத்திற்கு பிறகு என் வாழ்வின் பல உணர்வுமிகு தருணங்களில் மிக உத்தமமான தருணங்களில் கவிதைகளாய் விளைந்தவற்றில் மிக சிறு எண்ணிக்கையிலான, அதாவது 102 கவிதைகளை மட்டுமே இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளேன். 
            பணமில்லாதவனுக்கு தன் கைகளே சிறந்த உதவி. முத்து எடுக்க வேண்டும் எனில் ஆழ்கடலில் மூச்சடக்கி மூழ்கி கஷ்டப்பட தயாராக இருக்க வேண்டும்.. 
             உண்மையே பயமின்மையை தரும். உண்மை அன்பே நம்மைக் காக்கும் இறைரூபமாகும். ஆகையால் அன்பைப் பற்றுவோம் என்பதையும், அன்பை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தி உணர்ந்து மகிழலாம் என்பதையும் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள கவிதைகளில் இருந்து உணரலாம். பல இடங்களில் குற்றங்களை விமர்சக்கிறது. உங்களால் எளிதில் புரிந்துக் கொள்ள இயலும். அவ்வாறு புரிந்துக் கொள்வீர்களெனில் இது ஒரு உத்தமமான வழிகாட்டி நூலாக இருக்கும் என நம்புகிறேன்.
 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

அன்புடன் மித்திரன்


       தாய், தந்தை தாம் கொண்ட அன்பால் எனக்கு அருளிய பெயர் ' சிவனணைந்த பெருமாள் ' எனபதாகும். சிறுவயது முதல் தமிழின் மீது தீராத காதல் கொண்டிருந்தேன் என்று பொய் கூற விரும்பவில்லை. ஆனால், தமிழ் மீதான பற்று என்னை அறியாமலே என்னுள் வளர்ந்து வந்தது எனது இன்பங்களையும், துன்பங்களையும் தமிழில் எழுதி வைக்கும் பழக்கம் உருவாகி முகநூலில் எழுதத் தொடங்கிய பிறகே உணர்ந்தேன்.
           எழுத்து உலகில் அன்பிற்காக ஏங்கும் குழந்தை போல் 
அதிகப் புலம்பல்களை உணர்ச்சிப் பெருக்கில் எழுதி வந்தேன். அதோடல்லாமல் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களில், அவமானங்களில் பல படைப்புகளை எழுதி வந்தேன். அப்படி எழுதும் போது நான் நெசித்தவர்களே என்னை தனிமைப்படுத்தக் கண்டேன். ஆதலால், என் இயற்பெயரை மாற்றி ' அன்புடன் மித்திரன் ' என்ற பெயரில் எழுதத் தொடங்கினேன்.            

எழுத்து உலகில் அன்பிற்காக ஏங்கும் குழந்தை போல் அதிகப் புலம்பல்களை உணர்ச்சிப் பெருக்கில் எழுதி வந்தேன். அதோடல்லாமல் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களில், அவமானங்களில் பல படைப்புகளை எழுதி வந்தேன். அப்படி எழுதும் போது நான் நெசித்தவர்களே என்னை தனிமைப்படுத்தக் கண்டேன். ஆதலால், என் இயற்பெயரை மாற்றி ' அன்புடன் மித்திரன் ' என்ற பெயரில் எழுதத் தொடங்கினேன். 
      அடிப்படையில் ஏழைக்குடும்பத்தை சார்ந்த நான் திறமை இருந்தும் ஒதுங்கி நின்றேன். அதனாலேயே ஒதுக்கப்பட்டேன் என்று கூறலாம். பயம் தான் வெற்றியின் சத்துரு. அதோடு தொடுதிரை கைபேசி கூட வாங்க இயலாத ஏழ்மையில் சுழலும் என் வாழ்வில் தோல்விகளே எனக்கு அனுபவமானவை. அவையே எனக்குள் ஞான தீபத்தை ஏற்றி வைத்தன. ஆதலால் நான் தோல்விகளால் உருவானேன் என்பதில் பெருமை அடைகிறேன்.
         

Read More...

Achievements

+2 more
View All