வெற்றிகரமாக க்ரைம் படங்களை இயக்கி கொண்டிருக்கும் இளம் திரைப்பட இயக்குநர் பிரசன்னாவும் இளம் தொழில் அதிபர் கிருஷ்ணசந்தருக்கும் ஒரு விபரீதமான சவாலில் இறங்குகிறார்கள்.
கொலை செய்பவர்கள் எப்படியும் சிறு தவறாவது செய்து போலீசில் சிக்கிக் கொள்வார்கள்..என்பது பிரசன்னாவின் வாதம்
போலீசில் மாட்டிக்கொள்பவர்கள் தவறை தவறாக செய்பவர்கள். அதனால், நான் ஒரு கொலை செய்கிறேன். அதிலில் இருந்து எப்படி தப்பிக்கிறேன் என்பதை பார் - இது கிருஷ்ணசந்தரின் எதிர்வாதம்.
இதைக் கேட்டதும் அதிர்கிறான் பிரசன்னா. முதலில் தயங்குபவன் பிறகு கிருஷ்ணசந்தர் தோற்றால் அவன் சொத்தை தருவதாக சொன்னதும் ஒப்புக்கொள்கிறான்.
இதற்குபின் , கிருஷ்ணசந்தர் இந்த பந்தயத்தை வெல்ல திட்டம் தீட்டுகிறான். அந்த திட்டம் என்ன ? யாரை கொலை சய்ய முடிவெடுக்கிறான்? பரபரவென நகரும் கதைக்களம் உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும்.
சிறப்பு செய்தி - விவேக்கும் ரூபலாவும் துப்பறியும் அதிரடி கதை இது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners