உலக சமூகத்தில் மக்கள் எண்ணற்ற விதத்தில் பிரிவினையின் அடிப்படையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.சமூக அறிவியல் சார்ந்த பாடங்கள் ஆராய்ச்சியின் வளர்ச்சி மூலமாக புதிய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் விளக்கத்துடன் அளித்து வருகின்றன.சமூக அறிவியலில் உள்ள பாடங்கள் பெருமளவில் மனிதனையே மைய்யமாக கொண்டு வளர்ந்து வருகின்றன.மனிதனை அடிப்படையாக கொண்ட சமூக அறிவியலில் ஆராய்ச்சி என்பது கோட்பாடுகளின் வாயிலாக மாறிவருகிறது.நாகரீக வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழிற்நுட்ப மேம்பாடு நவீன காலத்தில் பலவித சிக்கல்கள் கொண்ட பிரச்சினைகளை கட்டவிழ்த்து விடுகின்றன.இவ்வகையான பிரச்சினைகளுக்கு சமூக அறிவியலில் நடத்தபெற கூடிய ஆராய்ச்சியின் முடிவுகள் நல்லதொரு தீர்வாக அமைகின்றன.தமிழில் ஆராய்ச்சி முறைமைக்கென்று குறைவாகவே புத்தகங்கள் உள்ளது.இப்படைப்பு அக்குறையை தீர்க்கும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளது எனலாம்.ஆராய்ச்சி முறைமைகள்,கருதுகோல்கள்,மாதிரிகள்,பழமைவாதம்,பகுப்பாய்வு போன்ற கருத்துகள் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.முனைவர் பட்டத்தை சமூக அறிவியல் ஆராய்ச்சியில் பெற விரும்புவர்கள் இப்புத்தகத்தை படித்து பயன்பெறலாம்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners