எத்தனையோ நிகழ்வுகளை பார்க்கையில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற பாரதி வரிகள் சுடுகிறது. இன்று மனசாட்சியை வீட்டிலேயே கழட்டி வைத்து விட்டு வெளியே வருபவர்கள் தான் அதிகம். இன்னும் சொல்லப்போனால் வடிவேலு பட நகைச்சுவை போல உனக்கு வந்தா ரத்தம் , எனக்கு வந்தா தக்காளி சட்னியா?
என்பது போல தான் நம் மனநிலை இருக்கிறது.
ஏமாற்றங்களும் துரோகங்களும் மலிந்து கிடக்கின்றன. பணத்துக்கு கொடுக்கும் மதிப்பை குணத்துக்கு கொடுக்க யாரும் இங்கே தயாராக இல்லை. இங்கு யாரும் உலகை திருத்துவதற்கு பிறக்கவில்லை. ஒருவேளை நம்மை திருத்தி கொண்டால் உலகம் தானாய் திருந்திவிடும் போல.
இருந்தாலும் நம் கண்ணனுக்கு எதிரே முரண்பாடான நிகழ்வு நடைபெறும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும் நம் மனதுக்குள் ஒரு குரல் ஒலிக்கும் . அந்த குரல் தான் நம் உண்மையான குரல். எதிர்த்து தட்டி கேட்க முடியவில்லை என்றாலும் எழுத்தால் பதிவிடுகிறேன்.
எளிய நடையில் கவி எழுத விரும்பும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். எத்தனை முறை சறுக்கி விழுந்தாலும் ஏணிப்படியாய் இருக்கும் அப்பா , அம்மா , மனைவி, மகள் எனும் அழகிய குடும்பத்தை கொண்டவன். வருமானத்திற்கு தொழில் இருந்தாலும் ஆத்ம திருப்திக்கு எழுத துவங்கி இன்று அதுவே பழக்கமாகி விட்டது. நகைச்சுவை உணர்வால் நம்பிக்கையோடு வாழ்பவன். இன்னும் சொல்லப்போனால் இப்பொழுது என்னை பற்றி பகிர்வதை விரும்பவில்லை. காலம் கனியட்டும் காத்திருக்கிறேன் .