சமூகம் கற்பித்த பழைய கற்பின் இலக்கணத்தை மாற்றி, உடலில் அல்ல கற்பு ஊனில் உறைவதென்று உணர்ந்து உயிரானவளை தேற்றி கைபிடித்து, தாரத்திற்கு மற்றுமொறு தாயாகி தாயுமானவனாக மகனை போற்றித் தாய்மாமானாக, பெற்றோர் இழந்த தங்கை மைந்தனையும் வளர்த்து, தரம்கெட்ட(பகை)வர் கதை முடித்துத் தரணி போற்ற வாழ்ந்த ஜெய்கிருஷ்ணனின் கதை இது…!
சக்கரத்தில் சிக்கிய அஷ்வத்தாமனாய், ஓர் பார்வையில் தனது உயிர் கொண்ட பாவையிடம் உயிராகி, காதலில் கரைந்து, ஊனில் உறைந்தவளை தொலைத்து, உணவு உறக்கம் மறந்து, உலகம் முழுதும் பறந்து, கண்டானா தனது பாவையை, வென்றானா தடையான பகைவனை, கொண்டானா இழந்த காதலை அறிவோம் அழியா இக்கதையில்.
கலகலப்பான காளையவன், கன்னியின் கண்ணசைவில் திவ்யமாய்ச் சரணடைந்தான். மொழி சொல்ல வழியில்லாதவள், விழி மொழிந்த காதலை மொழிபெயர்த்து, மணவாழ்க்கை கண்டவன் திவ்ய மங்கையின் மணாளன் மனோ.
அபாய விபத்தில் ஆசை காதலி தாயாகும் பாக்கியத்தை இழந்தாலும், அவளே என்னவள் எனத் தாரமாக்கி, வாழ்வில் காதலே ஆதாரமென வாழ்ந்து, உடன்பிறவா தங்கைக்கோர் கீதம் பாடி, அவளை தலைவனோடு ஜோடி சேர்த்த கதையிது…!
… கவிரகு
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners