இந்தியா என்கிற நன்னெறியானது உலக அளவிலே அமைதிக்கான ஆளுமையாக
உள்ளது என்றால் அது மிகையாகாது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பிரிவுகளாக
இருந்த நிலப் பிரிவினையானது ஒன்று சேர்க்கப்பட்டு “வேற்றுமையில் ஒற்றுமை”
என்கிற பண்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சீரான பாதையில் செயல்படுகிறது
இந்தியா.இதே பண்பானது இந்திய அயல்நாட்டு கொள்கையிலும் நாம் சீர்தூக்கி
பார்க்கலாம்.பாகிஸ்தான் இலங்கை ஆப்கானிஸ்தான் நேபால் ஆகட்டும் அல்லது
அமெரிக்கா ரஷ்யா பிரான்ஸ் பிரிட்டன் ஆகட்டும் அத்தனை நாடுகளுடன் பரஸ்பர
நல்லுறவை மேம்படுத்தி வந்துள்ள ஒரே நாடு இந்தியாவாக தான் இருக்கும்.
அயல்நாடுகள் அத்துனையுமே பல்வேறு பிரச்சனைகளில் அமைதியை இழந்து
தவிக்கிற பொழுது இந்திய நாடானது ஜனநாயக கொள்கையிலே சிறிதளவும்
வழுவாமல் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.கொரோனா-19
காலகட்டங்களில் இந்தியாவின் மருந்துதவியானது “பார்மசி ஆப் த வேர்ல்ட்” என்கிற
பேரன்பிற்குரிய பட்டத்தை இந்தியாவிற்கு பெற்று தந்துள்ளது.அதேபோல உலக
அமைதிக்காக இதுவரை செயல்பட்ட 70க்கும் மேற்பட்ட ஐக்கிய நாட்டு சபை அமைதி
காக்கும் படைகளில் 40க்கும் அதிகமான நாடுகளில் தன்னுடைய ராணுவத்தை
அனுப்பி அமைதி நிலையை மீட்டெடுத்தது இந்தியா.கலாச்சாரம் பண்பாடு
பாரம்பரியம் மொழி போன்ற அத்தனை அம்சங்களிலும் பழமை வாய்ந்த இந்திய
நாடானது வல்லரசாவதற்கு தகுதியைப் பெற்றிருந்தாலும் நல்லரசாக இருப்பதற்கே
விரும்புகிறது என்பதை அதன் வெளியுறவு கொள்கையிலிருந்து தெரிந்து
கொள்ளலாம்.இப்படைப்பானது இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கையையும்
உறவுகளையும் எடுத்தியம்பும் ஒரு முயற்சியாகும்.போட்டி தேர்வுகளுக்கும் ஏனைய
பல்கலைக்கழக கல்லூரி தேர்வுகளுக்கும் கண்டிப்பாக உதவும் என நம்பப்படுகிறது.