வெற்றுப் பொழுதுகள் வெறுமை உணர்வுகளென கழித்த சில நாட்களில் ரசனைகளின் ஊக்கமாய் அனுபவங்களின் தாக்கமாய் கண்ணில் மற்றும் மனதில் பட்டவைகளை சற்றே கவிதை நடையில் எழுதிய ஒரு சிறு முயற்சியே இக்கவிதைத்
தொகுப்பு. இதயம் லயிக்கும் பரிதவிக்கும் பல விஷயங்களின் பரிந்துரையாக இக்கவிதைகள் இருப்பதாதலால் "இறைஞ்சும் இதயம்" எனும் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆங்கிலம் மற்றும் சமூகப் பணியில் முதுகலை பட்டம் பெற்றவர். பள்ளி ஆசிரியையாக பணியைத் தொடங்கி இடையே சமூகப்பணி சார்ந்த ஆரம்ப அனுபவ வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். சட்டக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி தற்போது பகுதிநேர ஆங்கில மொழி ஆலோசகராக இருந்து வருகிறார். பள்ளிக்காலங்கள் தொட்டே தன்னுடைய ஆசிரியர்களின் ஊக்கத்தாலும் தன் தாத்தாவினுடைய ஆர்வத்தாலும் தமிழ் மொழியில் நற்ப்பயிற்ச்சியைப் பெற்றவர். இன்றளவும் தமிழார்வம் குன்றாத வண்ணம் அவ்வப்போது சிறுசிறு வாசிப்புகளும் எழுத்துக்களும் முயற்ச்சிப்பவர்.