யார் இறைவன்? இறைவன் இருக்கிறானா? இறைவன் ஒருவனா?பலவனா? இறைவன் எங்கு இருக்கிறார்? இறைவனை காணமுடியுமா? இறைவனை கண்டவர்கள் உண்டா? ஆன்மா இருக்கிறதா? இறைவன் உயிர்களை காப்பானா? இறைவனை அடைய வழி உண்டா? நான் ஏன் பிறந்தேன்? இந்த பிறவியின் நோக்கம் என்ன?
அடியார்க்கும் அடியேன் சிவமணிகண்டன் வணிகவியல் துறை சார்ந்த பேராசிரியர். சைவ சித்தாந்தத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சிவதொண்டர். சிறுவயதில் இருந்தே சிவனின் அன்பைப்பெற்றவர். தனது கல்வி நிறுவனத்தில் சைவசித்தாந்தத்தை மாணவர்களுக்கு கற்பித்தவர். திருவாசக முற்றோதல் செய்து சிவனடியார்களை போற்றுபவர்.
அடியார்க்கும் அடியேனாய் இருந்து சிவதொண்டுகள் பல செய்பவர். சிவ தொண்டு செய்ய இந்து கல்வி மற்றும் மத அறக்கட்டளையை தோற்றுவித்து குழந்தைகள், மாணவர்களுக்கு திருமுறைகல்வி புகட்டி சான்றிதழ்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி மகிழ்பவர். சிவன்அருளை அனைவரும் பெற்றுஉய்ய அனுதினமும் சிவனை போற்றிவேண்டும் அடியார்க்கும் அடியேன் அவர்.