சுபமதி, செல்லமாக வளரும் பணக்கார வீட்டுப் பெண். அப்பா தொழிலதிபர்.அம்மா இல்லாததால் சுதந்திரம் கொடுத்து பாசமாக வளர்க்கும் அப்பா. பல விஷயங்களில் கண்டிப்பானவர். அதனால் அவளுக்கு அப்பாவிடம் பயம் கலந்த மரியாதை.
ஒரு சமயத்தில் தன் உயிரை காப்பற்றியதால் சுபமதி ,புவனேந்திரன் எனும் இளைஞனிடம் மனதை பறிக் கொடுக்கிறாள். இதற்கிடையில் அவளின் அப்பா தன்னுடனே இருக்கும் அக்கா பையன் சுந்தரத்தை சுபமதிக்கு திருமணம் செய்ய ஆயுத்தம் செய்கிறார்.
காதலன் வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறான்.அவ்வளவு இலகுவாக அப்பாவிற்கும் சுந்தரத்துக்கும் துரோகம்செய்ய அவளுக்கு மனம் வரவில்லை.
குழப்பத்தில் ஆழ்கிறாள் சுபமதி.ஆனால் அவள் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். அந்த முடிவு அவள் வாழ்க்கையை மட்டுமல்ல அவள் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது.
கதையில் வரும் வசனங்களும் நிகழ்வுகளும் உங்கள் மனதை வருடவும் செய்யும், நெகிழவும் செய்யும்.
பிறகு, கதைக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? அறிய படியுங்கள்,ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில் இரண்டாவது தாலி.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners