இந்த கதையின் கரு - ஒரு குழந்தையை வளர்க்கும் போதே அதற்கு நல்லது கெட்டதை சொல்லி வளர்க்க வேண்டும்.. அதுவே அவனை ஒரு ஹீரோவா காட்டும் இல்லையேல் அது வில்லனாகவே வளரும்.. எனவே நமது பிள்ளைகள் ஹீரோவாக வேண்டும் என நினைத்தால்... தவறு செய்யும் போது கண்டிக்கவும் செய்வோம்.. நல்ல பண்புகளை கூறி வளர்ப்போம்.. நாளைய சமுதாயத்தையாவது திருத்துவோம் என்பதே..
என்னை பற்றி ...
வணக்கம், என் பெயர் சுஜாதா நடராஜன். கணவரின் பெயர் நடராஜன். அழகாக இரண்டு மழழை செல்வங்கள்.
எனக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும். சிறுவயது முதலே நிறைய கதைகளை விரும்பி படிப்பேன். மாயாவியில் ஆரம்பித்தது என் படிக்கும் ஆர்வம். அது அப்படியே வளர்ந்து வந்தது என் பள்ளிபடிப்பு முடியும் வரை. நிறைய எழுத்தாளரின் படைப்புக்களை படித்துள்ளேன். அது சிறிய கதையாக இருந்தாலும் சரி... பாடபுத்தகத்தில் வரும் கதைகளாக இருந்தாலும் சரி.. விரும்பி படிப்பேன்.
அதன் பிறகு பெரிய இடைவெளி ஏற்பட்டது. புத்தகம் படிக்க நேரம் வாய்க்கவில்லை. நிறைய கடமைகள் பொறுப்புக்கள் இருந்தன. அதை எல்லாம் ஓரளவு நிறைவு செய்து விட்டு, இப்போது எமக்கான அடையாளத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டுமே, அதற்கு என்ன செய்வது என்ற சிந்தனை மேலோங்கியது. அப்போது தான் கதை எழுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த கதைக்கு நிறைய வரவேற்பும் வாசகரிடம் இருந்து வந்தது. அதுவே என்னை மேலும் ஊக்கப்படுத்தி எழுத தூண்டியது. அந்த வாசக நண்பர்களுக்கும், என்னை ஊக்கபடுத்தும் என் அன்பு கணவருக்கும் என் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.