பட்டாம்பூச்சி கவிஞரின் "காதல் பெரும் பங்கு வகிக்கும்" என்னும் இந்நூலில் மனதை வருடிச்செல்லும் வசீகரமான காதல் வரிகள் பெரும் பங்கு வகித்தாலும் ஆங்காங்கே காணப்படும் வாழ்க்கையை நெறிப்படுத்தி உற்சாகமூட்டும் கவி வரிகளும் வாசகர்களான உங்களை சிந்தனையில் ஆழ்த்த காத்திருக்கின்றன. வாசிக்கும் போது நம்மோடு தொடர்புள்ளதாக நமக்கு பொருத்தமானதாக அமைந்திருக்கும் கவிதை வரிகளையே நாம் அதிகம் நேசிப்போம். அந்த வகையில் இப்படியான வரிகளை வரிசையாக தந்திருக்கும் கவிஞர் பா. அஜய் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் அவரின் எதிர்கால நூல் வெளியீடுகள் சிறப்புற அமைய மனமார்ந்த வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
- இலங்கை பிரியா