சிறுநீரக பாதிப்புகள் பற்றிய இந்த புத்தகம் கேள்வி பதில்கள் வடிவத்திலே எழுதி வெளியிடப்பட்டுயிருக்கின்றது.
சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள், எத்தனை வகையான சிறுநீரக பாதிப்புகள் உள்ளன என் பதைப்பற்றி தெளிவாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதியிருக்கிறோம். சிறுநீரக வியாதியின் ஆரம்ப அறிகுறிகள், அவற்றைப் பரிசோதனைகளின் மூலம் உடன் கண்டுபிடிக்கும் முறை, மேலும் அதற்கான சிகிச்சை முறைகளைப்பற்றி எளிய தமிழில் சொல்லப்பட்டு இருக்கின்றது. தற்காலிக திடீர் சிறுநீரக செயலிழப்பு, நிரந்தரமான நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு , இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, அதற்கான சிகிச்சை முறைகள், சிறுநீரக மருத்துவசிகிச்சை நிபுணர் (நெப்ராலஜிஸ்ட்) மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் (யூராலஜிஸ்ட்) ஆகியவர்களுக்கு இடையிலுள்ள சிகிச்சை முறையில் வித்தியாசம் என்ன என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இரத்தசுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசிஸ்) பற்றிய விவரங்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாது, உணவு முறையில் மாற்றத்தின் அவசியத்தையும் இந்த புத்தகத்தில் தெளிவாக எடுத்து கூறப்பட்டு இருக்கிறது. படித்துப்பயன் பெறுங்கள்.
“சிறுநீரக மருத்துவ சேவையில்” எங்களின் சிறிய முயற்சி இது.
நிறைவுகள் இருந்தால் பாராட்டுங்கள். குறைவுகள் இருந்தால் பகிருங்கள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners