சிலர் ஆப்பிளின் மேசின்டோஷ் (Macintosh) இயங்குதளத்தினை ஒரு மாற்றாகக் கருதுவர். எனினும் அதுவும் தனக்கென்று ஒரு ஆளுகையை வைத்துக் கொண்டு தனியுரிமை (Properitariship) கொண்ட ஓர் இயங்குதளமே ஆகும்.
இவைகளைப் போல தனியுரிமையின்றி, முற்றிலும் விலையில்லாமல் ஒரு இயங்குதளம் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கலாம். எனினும் உண்மை. அந்த இயங்குதளம்தான் லினக்ஸ்(Linux).