மனிதர்களிடையே புதைந்திருக்கும் எண்ணிலடங்கா தவறான கருத்துக்களை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அவற்றுள் சில:வாழ்க்கை என்பது சவாலான ஒன்று தான். வாழ்க்கையின் பாதை என்பது ரோஜா பூக்களால் மட்டுமே அமைக்கப்பட்டது கிடையாது. வாழ்க்கை என்பது பல சமயங்களில் நியாயமற்ற ஒன்றாக கூட தோன்றலாம். அவரவர்களது தலைவிதியின் படி வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் நடந்தேறும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களது பார்வையில் சரி என்று படுவது வேறொருவரது பார்வையில் தவறாக இருக்கலாம்.
நம்முள் விடை காண முடியாத பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கலாம். வாழ்க்கையில் எதுவுமே நியாயப்படி நடக்காதா? எதனால் நாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம்? எது சரி? எது தவறு? நமக்குள் ஒரு இனம்புரியாத வெறுப்பு அவ்வப்போது எட்டி பார்க்கிறது. வாழ்க்கையின் சட்ட திட்டங்களை நாம் சரியாக அறிந்திருந்தால், இத்தனை இன்னல்களும் நமக்கு வாழ்க்கையில் நேராதே!
ஆம்! வாழ்க்கையின் சட்ட திட்டங்களை நாம் சரியாக அறிந்து கொண்டால் ஒரு முழுமையான மகிழ்ச்சியான வாழ்க்கையை நாம் வாழலாமே!
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners