Share this book with your friends

Meignanam / மெய்ஞானம்

Author Name: Jerald Balasingh | Format: Paperback | Genre : Self-Help | Other Details

நாம் பெரும்பாலும் முதல் பார்வையின் அடிப்படையிலேயே வாழப் பழகிவிட்டோம். முதல் பார்வையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம். பார்க்கிறோம், தீர்ப்பு வழங்குகிறோம், பிறகு கடந்து செல்கிறோம்.
ஆனால், உலகம் ஒருபோதும் அத்தனை எளிமையானதல்ல. 


இந்த புத்தகம், நீங்கள் சற்றே நின்று, 

•  நாம் உறுதியென்று நம்பிய விஷயங்களை எல்லாம் கேள்வி கேட்கவும்,
•  அன்றாட வாழ்க்கைக்குள் மறைந்திருக்கும் ஆழமான விஷயங்களைக் கண்டறியவும்,
•  பலவீனம், கருணை, பெருமை, மகிழ்ச்சி, அன்பு, மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் போன்ற விஷயங்கள் எல்லாம் நாம் நினைப்பது போல அவ்வளவு நேரடியானவை அல்ல என்று உணரவும்

உங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது:

இதன் நோக்கம் தாழ்மையையும், சிந்தனையையும், வேறுபட்ட பார்வையைக் காணும் துணிச்சலையும் வளர்ப்பதே ஆகும்.
ஏனெனில், இவ்வுலகில்  நாம் பார்க்கத் தேர்ந்தெடுக்கும் விதத்தைவிட வேறு எதுவும் அதிகம் மாறுவதில்லை.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ஜெரால்ட் பாலசிங்

திரு. ஜெரால்ட் பாலசிங் அவர்கள் சென்னை மாநகரில் பிறந்தார். தன் இளம் வயதின் பெரும்பாலான காலத்தைக் சென்னையிலும், கணிசமான காலத்தை வேல்ஸ் (Wales) நாட்டிலும் செலவிட்டார்.

சென்னை நகரின் பரபரப்பான வீதிகளும், அங்குள்ள பன்முகப்பட்ட மனிதக் குரல்களும், வேல்ஸ் நாட்டின் அமைதியான சுற்றுப்புறமும், அவருக்கு தன்னைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பதற்கும், மனதில் தெளிவு பெறுவதற்கும் உதவியது.

இந்த இரண்டு விதமான தாக்கங்களிலிருந்து அவர் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, தனது கதைகளை எழுதுகிறார். அன்பு, மகத்துவம், மகிழ்ச்சி, பலவீனம், காதல், மற்றும் அர்த்தமுள்ள வாழ்வு போன்ற மனித உணமைகளின் சிக்கலான மற்றும் மாறக்கூடிய தன்மையை இந்தக் கதைகள் ஆராய்கின்றன.
மனித வாழ்க்கையின் சிக்கல்களைப் புரிந்துகொள்வதில் அவருக்குள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை இவரது படைப்புகள் பிரதிபலிக்கின்றன. தெரியாத விஷயங்களை ஏற்றுக்கொண்டு, மீண்டும் ஒருமுறை கூர்ந்து பார்ப்பதன் மூலம் வாழ்க்கையில் அர்த்தத்தைக் கண்டறியுமாறு அவர் வாசகர்களை வலியுறுத்துகிறார்.

 

Read More...

Achievements