முரட்டுக் குதிரைக்கு 37 கடிவாளங்கள்: பிராணாயாமப் பயிற்சிக் கையேடு என்ற இந்த நூல் Mind Your Breathing: The Yogi’s Handbook with 37 Pranayama Exercises என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். விருது பெற்ற அந்த நூலின் ஆசிரியர் சுந்தர் பாலசுப்ரமணியனே இதனை மொழிபெயர்த்துள்ளார். இந்தப் புத்தகத்தில் புகழ்பெற்ற பல பிராணாயாம முறைகளும், அவற்றினைப் பொருத்தமாக மாற்றியமைத்த முறைகளும், சித்தர்களின் வழிமுறையில் முற்றிலும் புதியதுமான முறைகளும் இடம்பெற்றிருக்கின்றன. பல நூற்றாண்டுகள் தொன்மையான மரபின் அறிவுச் சாரத்தையும், அவற்றைத் தற்கால அறிவியலின் வாயிலாக நிறுவும் ஆராய்ச்சிகளையும் படம்பிடித்துள்ள இந்நூல் உங்கள் யோகப் பயிற்சி செய்யும் நண்பருக்குச் சிறந்த பரிசாக இருக்கும்!
இந்நூலைப் பற்றிய விமர்சனங்கள்
சுந்தர் பாலசுப்ரமணியன் தொன்மையான யோகப் பயிற்சிகள் நம்மை ஓய்வாக இருக்க வைக்கும் என்பதையும் தாண்டி அவை செல் (அணுக்)களின் அளவில் மாற்றங்களை உண்டாக்கும் என்பதையும் காட்டியுள்ளார்.
- டிஸ்கவர் இதழ்
யோகாவின் நோய் தீர்க்கும் பதினெட்டு அடிப்படையான கண்டுபிடிப்புகளில் தலையாயது
- யோகா ஜர்னல்
டாக்டர் சுந்தர் பிராணாயாமத்தில் ஒரு உலகத் தரம் வாய்ந்த முன்னோடி. இந்தத் தலைசிறந்த படைப்பில் பிராணாயாம முறைகளைத் தெளிவாகவும், பயனுள்ள வகையிலும் கற்றுத் தருகிறார்.
- தாமஸ் டோசியர் ஜூனியர்
இதுவொரு தனிச்சிறப்பான புத்தகம். பிராணாயாமத்துக்கு எவ்வளவோ நூல்கள் வந்திருந்தாலும் இது ஒரு உயிரியல் ஆராய்ச்சியாளரால் ஆராயப்பட்ட முறைகளையும் பழங்கால சித்தர் மரபு வந்த முறைகளையும் கூறுவது.
- அமேசான் வாடிக்கையாளர்
இந்தப் புத்தகம் பிராணாயாமங்களைப் பற்றிய தெளிவான பார்வையைத் தருகிறது. விளக்கங்கள் நன்றாக உள்ளன.
- பெச்செட்டி ஹரிஷ்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners