Share this book with your friends

Muthalidu - Almanathil / முதலீடு - ஆழ்மனதில் Invest in subconscious mind.

Author Name: Theodur Rayan, V.Sophia banu | Format: Paperback | Genre : BODY, MIND & SPIRIT | Other Details

 மனித வாழ்வில் நிகழும் ஒவ்வொரு காரியமும் அவருடைய ஆழ்மனதில் பதியப்பட்ட பதிவுகளின் வெளிப்பாடு ஆகும்.  ஆழ்மனதில் கூறப்படும் காரியத்தை ஆழ்மனம் உங்களுடைய சேவகன் போல் செயல்பட்டு நடத்திக்காட்டும். ஆழ்மனதிற்கு நீங்கள் தரக்கூடிய தகவல் நேர்மறையாக இருந்தால், அதனால் நிகழக்கூடிய விளைவுகள் நேர்மையாகவே இருக்கும்.            ஆழ்மனதை தூண்டி விடுவதால் எந்த காரியத்தையும் நீங்கள் சாதிக்க இயலும் நேர்மறை தூண்டுதல் உருவாக்கப்பட்டால் நேர்மறை விளைவுகள் நிகழும்.  அத்தகைய வழிகள் அல்லது முறைகள் பற்றி இந்தப் புத்தகம் விரிவாக கூறுகிறது.  எனவே எந்த முடிவுகளையும் ஆழ்மனதில் எழுதி வைக்கவும். நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு வெற்றிகரமாக உங்களை அடையும்.நேர்மறை சுயபிரகடணங்களை செய்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிபெற செய்யுங்கள். இளம்வயதில் ஒருவருடைய மனதில் எழுதப்படும் காரியம் தொடர் முயற்சியால் கண்டிப்பாக நிறைவேறும். ஆழ்மனதின் சக்தி கொண்டு ஆண்-பெண் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை துணையை தேடிக்கொள்ள இயலும். நான் விரும்பும் கணவர்/மனைவி எனக்கு என் விருப்பம் போல கிடைக்கிறார் என சுயபிரகடணம் செய்தால் அதுவே ஆழ்மனதில் பதியப்பட்டு நிறைவேறும்.அச்சம் உங்களை ஆட்கொள்ளும் போது அதற்கு எதிரான ஒரு எண்ணத்தை உங்களுடைய ஆழ்மனம் உங்களுக்குள் உருவாக்கும். தடைகளை தீர்த்திட அந்த தடைகள் பற்றிய உண்மையை ஆழ்மனதிற்கு தெரியப்படுத்துங்கள். ஆழ்மனம் சரியான தீர்வை உங்களுக்கு அளிக்கும். மனிதரின் உடல் சிதைவடைவதற்க்கு வயது மட்டும் காரணம் இல்லை. வயதாகி விட்டதே என்று மனதில் எண்ணுவதே அதற்கு காரணம். எனவே ஆழ்மனதில் நல்ல எண்ணங்களை தேக்கி செழுமையான வாழ்வு வாழுங்கள்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ஆ.தியோடர் ராயன், V.Sophia banu

இந்த நூலின் ஆசிரியர் ஆ.தியோடர் ராயன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். அவர் எழுதியுள்ள புத்தகங்கள் எல்லா வயதினரையும் ஊக்குவிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. இவர் தமிழில் 6 புத்தகங்களும்,  ஆங்கிலத்தில் ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார். ஊக்குவிப்பு கட்டுரையாளராக தன் எழுத்துப்பணியை துவங்கிய இவர் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

1..பொங்கிடும் புதிய மனம், 

2.எண்ணங்களே ஏற்றம் தரும் 

3.இராயனின் கவிதைகள் – I, 

4 .உங்களின் வாழ்க்கையை இனிதே வாழுங்கள், 

5.ஆழ்மனதின் சக்தியும், ஈர்ப்புவிதியும் 

6.மனநலமும் ஆளுமையும் - திருக்குறள் வழி 

என்ற புத்தகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் “FOCUS HOOK,SUCCESS” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

 நூலின் ஆசிரியர் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். அவர் தந்தை பெயர் ஆரோக்கியசாமி மற்றும் தாயாரின் பெயர் கமலம் ஆகும்.தனது பள்ளிக்கல்வியை சொந்த கிராமத்தில் முடித்தவுடன் திருச்சியில் பட்டப்படிப்பையும், சென்னையில் பட்டமேற்படிப்பையும் முடித்தார். விற்பனை துறையில் தனது வேலையை ஆரம்பித்து கணினித்துறையில் பகுப்பாளராக(ANALYST) வேலை செய்து வரும் போது அமெரிக்க ஐக்கிய நாட்டிற்க்கு(USA) சென்று பணி செய்தார். மேலும் பிரிட்டன் தேசம் சென்று தனது மேலாண்மை கல்வியைக் கற்று மேலாளராக பணி செய்து தாய்நாடு திரும்பிய பின் வணிகத்தில் ஈடுபட்டு கொண்டே எழுத்துப் பணியை செய்து வருகிறார். வெளிநாடுகளில் பல்வேறு நூலகங்கள் சென்று வாசிப்பை மேற்கொண்டதால், தானும் தரமான புத்தகங்களை தனது தாய்மொழியில் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

Read More...

Achievements

+4 more
View All