எனது கல்லூரியின் ஆரம்ப காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. இதில் எந்த வித சொல் மேட்டமை தனமும் இல்லாது மிக சாதாரண ய்மொழியில் எழுதப்பட்டவை. பொதுவாக இந்த கவிதைகளில் கிராமத்து இளைஞர்களின் பால்ய சந்தோசங்கள் கூடுமானவரை அழகியலாக்கப்பட்டிருக்கும். கேடயமில்லாது வெறும் கத்தியோடு சண்டையிட போகும் வீரனின் திமிரே இந்த கவிதைகளின் வெளிப்பாடு.