பெண் என்பது இரண்டு எழுத்து தான், ஆனால் அந்த இரண்டு எழுத்து ஆக்கவும் சரி அழிப்பதும் சரி அனைத்திலும் சிறந்தது. பெண்ணால் முடியாதது ஏதும் இல்லை. பெண் பண்முகம் கொண்டவள். பூவாகவும், புயலாகவும், தீயாகவும் மாறும் தன்மை கொண்டவள். அப்படி பட்ட பெண்ணை சிலர் போதை பொருளாக பார்க்கின்றனர். சிலர் அடிமைகளாக நடத்துகின்றனர். இதனால் என்னவோ பெண்கள் சிலர் சமூகத்துக்கும், குடும்பத்துக்கும், மற்றும் ஆண்களுக்கும் பயந்து பெண்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். திறமைகள் பல இருந்தாலும் பெண்கள் சாதிப்பதில்லை. பெண் என்பவள் விறகல்ல அவள் வாழ்க்கை அடுப்படியில் முடிவதற்கு. எண்ணற்ற பெண்கள் தங்களால் முடியுமா என்ற சந்தேகத்தோடு வாழ்கின்றனர்.சிலர் தன்னம்பிக்கை இழந்து வாழ வழி தெரியாமல் தவறான வழியில் செல்கிறார்கள். அவர்களை மாற்றும் விதமாக இந்நூலை உருவாக்கியுள்ளேன்.பெண்களால் சாதிக்க முடியும். பெண்மையை போற்றுவோம்.