“விவிலிய எபிரேய அடிப்படை இலக்கணம்” எனும் இந்நூல் தமிழ்வழி இறையியல் கல்வி பயிலும் மாணக்கர், எபிரேய மொழியின் அடிப்படை இலக்கணத்தை கற்க உதவும் நூலாகும். விவிலிய எபிரேய இலக்கணத்தை கற்க ஆங்கில நூல்கள் பல எழுதப்பட்டுள்ளன. ஆனால் இந்நூல் தமிழில் எழுதப்பட்டிருக்கிற முதல் நூலாகும். இந்நூலில் இடம்பெறும் எளியப் பயிற்சிகளும் அதற்குரிய விடைகளும் ஆசிரியர் உதவி இல்லாமலும் மாணவர்கள்
பயிற்சி செய்து எளிமையாக கற்றிட உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளன. நாற்பது வகுப்புகளில் எபிரேய இலக்கண அறிமுகத்தை ஆசிரியர்கள் கற்றுத்தர
உதவும் கையேடாகும். செராம்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் படி பாடங்களும் பயிற்சிகளும் அமைக்கப் பெற்றிருக்கின்றன. இறையியல் கல்வி
பயிலும் மாணவர்களுக்கு மட்டுமன்றி திருவிவிலிய ஆய்வில் ஆர்வமுடையவர், அருளுரைஞர், விவிலிய எபிரேய மொழியில் ஆர்வமுடைய எல்லோருக்கும்
பயனுள்ள வகையில் எழுதப்பட்டுள்ள முதல் தொகுதியாகும். தேவைப்படும் இடங்களில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இணைத்து எழுதப்பட்டுள்ள பாடங்களும், பயிற்சிகளும் அதற்குரிய விடைகளும், புதியச் சொற்களும் எபிரேய இலக்கணத்தை பிழையற கற்க உதவும் சிறப்பான நூலாக மாற்றியிருக்கிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners