ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கிட முனைந்த பலரில் அய்யன்காளி அவர்கள் தனித்துவமானவர்.வாழ்வின் எதார்த்தத்திலிருந்து வலிகளை உணர்ந்து தலித் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டவர் இவர்.புரட்சியாளர் என்கிற கருதுகோளினை இந்நூலாசிரியர் எடுத்துக்கொண்டதாக வைத்துக்கொண்டால் , அக்கருதுகோளினை நிறுவுவதற்காக பதினான்கு உட்தலைப்புகளில் இவர் எடுத்துவைத்திருக்கின்ற ஒவ்வொரு சான்றும் கருதுகோளினை உறுதிசெய்திருப்பதை வாசகர்களால் உணரமுடியும்.