1920 களில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது முழு இந்திய துணைக் கண்டத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்திற்கான நிகழ்வாக இருந்தது. ஆனால் இந்திய சுதந்திரத்துடன் இந்தியப் பிரிவினையும் வந்தது. புகழ்பெற்ற மொஹென்ஜோ-தரோ மற்றும் ஹரப்பா ஆகிய இரண்டு நகரங்களும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது. வரலாறும் புவியியலும் ஒன்றாக படைத்ததை , மனிதன் தனது அறிவீனத்தாலும் தந்திரத்தாலும் இரண்டாகப் பிரித்துவிட்டான்... சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்பான இரண்டு நகரங்களும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது... இது இந்திய குடிமக்களுக்கு, குறைந்தபட்சம் வரலாற்று அறிவும் பெருமிதமும் வய்க்கப் பெற்ற குடிமக்களுக்கு மிகவும் வருத்தம் அளித்தது.வரலாறு ஒரு கதவை மூடும்போது, மற்றொரு கதவை திறந்து வைக்கிறது.. 1950கள் தொடங்கி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிந்து சமவெளி நாகரிகம் இருக்கக் கூடிய சாத்தியமான இடங்களை தோண்டி எடுக்க கடுமையாக உழைத்தனர். அவர்கள் உழைப்பு வீணாகவில்லை.. சிந்துநாகரிகத்தின் பல முக்கிய தளங்கள் தோண்டப்பட்டன. அவற்றில் சில சிந்து நாகரிகத்தின் அசல் இரட்டை நகரங்களை1[1]" விட பெரியவை மற்றும் செழிப்பானவை..ஆயினும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மொகஞ்சதாரோவின் சிறப்புக்கும் செழிப்பிற்கும் இணையில்லை என்பதையும் மறுக்க இயலாது. எடுத்துகாட்டாக அங்கு கிடைத்த நடனப் பெண்னின் சிலை போன்ற செப்புச்சிலை வேறு எந்த் இடத்திலும் கிடைக்கவில்லை. அதைப் போலவே பெரியமனிதனின் சிலையும்( பூசாரி / அரசன்/ பெருந்தகை) வேறு எங்கும் கிடைக்கவில்லை. சிந்து நாகரீகத்தின் இந்தியத் தளங்கள் பல உள்ளன.அவற்றில் சிலவற்றைப் பற்றி இந்த நூலில் காண்போம்.
[