சில காதல் கதைகளாக மாறும், சில கதைகள் காவியமாக மாறும் ஆனா ஒரு சில கதைகள் மட்டுமே சரித்திரமாக மாறும். அப்படி பட்ட சரித்தரமாக மாற வேண்டி, தொலைத்த காதல் கதை தான் சிறுபொழுது காதலியே ... நாவல். கடந்த காலத்துல தொலைத்த தான் காதல தேடி செல்லும் முப்பது வயது ஆண்மகன். அது கிடைக்குமா என்று அந்த காதலை தேடிய அவனோட பயணம் முடிந்ததா, இல்லையா என்று மிஸ்டரி கலந்த கதை களத்திற்கு உயிரோட்டம் கொள்ளும் கதை. சிறு தவறுகளால் சிதைவுற்ற தன் முன்னாள் காதலை மீண்டும் ஒன்று சேர போகும் வேளையில் சில பிரச்சனைகளால் அந்த ஆசை நிறைவேறுமா இல்லையா என்று கூறும் ஒரு கதையாக அமைந்ததே "சிறுபொழுது காதலி ..." என்னும் நாவல்.