ஒரு காலத்தில் உணவே மருந்தாக இருந்தது . இன்று மருந்துகளைதான் நாம் உணவாக உட்கொள்கிறோம். நம்மை சுற்றியுள்ள எத்தனையோ தாவரங்கள் நம் உடலில் உள்ள நோய்களுக்கு மருந்தாக இருக்கின்றது. அதில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்பதைவிட , தெரிந்தவர்கள் அதனை உணவில் பயன்படுத்துகிறீர்களா? என்பது ஐயமே. நம் முன்னோர்கள் நம்மை சுற்றியுள்ள தாவரங்களை உணவில் பயன்படுத்தினர். அதனால் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழ முடிந்தது. இன்று மனிதனின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு என்பது நாம் அறிந்ததே. எனவே எனக்கு தெரிந்த மருத்துவ குணங்கள் உள்ள தாவரங்கள் மக்களுக்கு பயன்படட்டும் என்ற எண்ணத்தில் இந்த நூலை அளிக்கிறேன்.
ச. கமலதாசன் மாவட்டம் கீவளூர் தாலுக்கா கோவில் கண்ணப்பூர் கிராமம், விவசாய குடும்பம், தந்தையார் சிறுவயதிலேயே காலமாகி விட்டார். தாய் அனைத்து மூலிகை தாவரங்களையும் நன்றாக தெரிந்தவர். கிராமத்தில் உள்ள அனைவர்க்கும் தேள்கடி, விஷக்கடிக்கு மருந்து இலவசமாக கொடுத்து குணமாக்குவர். பாரம்பரிய வைத்தியங்களில் கை தேர்ந்தவர். அதே போல் மனைவியும் மூலிகை செடிகளை பற்றி நன்கு அறிந்தவர். குடும்பத்தினர் அனைவரும் இயற்கை வைத்தியத்தை வரும் தலைமுறையினர்க்கு கொண்டு செல்ல முயன்று வருகிறோம்.