 
                        
                        இந்த உலகத்தில் எப்பொழுது காதல் பேசுவதை நிறுத்திக்கொள்கிறதோ அப்பொழுது வன்முறை பேச தொடங்குகிறது.....காதல் என்பதையே கெட்ட வார்த்தை என்கிறார்கள் சிலர். இந்த கெட்ட வார்த்தையை பேசிக்கொண்டே இருப்பவர்கள் கவிஞர்கள். இந்த ஒரு கெட்ட வார்த்தையை பேசும் பொழுது மட்டுமே மனம் அவ்வளவு தூய்மையடைகிறது. உயிர் அவ்வளவு விசாலமாகிறது.காதல் என்பது கெட்டவார்தை என்பவர்கள் காதல் என்ற நதியில் மூழ்கி கொண்டிருந்து சில காலங்களுக்கு பிறகு கரையேறியவர்கள்.பின் புதிதாய் வேறு சிலர் அந்த நதியில் மூழ்க ஆரம்பித்து விடுகிறார்கள்.அவர்களுக்கு காதல் ஒரு  புனித சொல்.பின் அவர்கள் கரையேறும் போது கெட்டவார்த்தையாகி போகிறது.எல்லோரும் நினைப்பது போல் காதல் வேறு அன்பு வேறு அல்ல. அன்பில் திளைத்திருந்தால் நீங்கள் காதலிக்கப்படுவீர்கள். அதுவே உங்களுக்கு காதலில் ஆர்வம் இருந்தால்  அன்பு உங்களுக்குள் திளைத்திருக்கும்.எப்பொழுதெல்லாம் நீங்கள் வாழ்வில் கசப்பை உணர்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் காதலின் கரும்புச்சக்கரை கவிதைகளை வாய்க்குள் போட்டுக்கொள்ளுங்கள்.நூறு கவிஞர்களின் நூறு கவிதைகள். காதல் என்பது வரையறுக்கப்பட்ட சட்டத்திற்கு அப்பால் நிகழ்வதுதான்.எனவே காதலுக்கென்று ஒரு முன்னுரையோ அல்லது விளக்கவுரையோ தர யாராலும் முடியாது.காதல் என்பது புரிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை புரிந்துகொள்வதே காதல். 
எல்லோரும் காதலியுங்கள்... 
எல்லாவற்றையும் காதலியுங்கள்... 
வாருங்கள் காதல் பேசுவதை கேட்கலாம்