 
                        
                        உழவன் உழைப்பை விதைக்கிறவன்,
விதைகளாய் வீரியமாய் விந்தையாய் விலாசமாய்,
எதையும் மாற்றிக்கொண்டு தன்போக்கில் பயணிக்கிற மானிடரின் மத்தியில்,
தனது கடமை உழைப்பு உறுதி அர்ப்பணம் வழித்தடமென்றும் இம்மியளவும் மாற்றம் கொள்ளாமல்,
வயிற்றுக்குச்சோறிட வாடிவதங்கி ஓடி உழைக்கிற பேரிறைவனானவன் உழவன்,
பழமையின் தடங்களை சிதைத்து,
தன்னார்வமென்ற பெயரில் எதையெதையோ தருவிக்கிற அன்றாட நிகழ்வுகளின் அர்த்தங்களுக்கு மத்தியில்,
உணவின் வளம், உயிரின் பலம் என்பதை உணர்ந்து,
சமுதாயம் காக்க சரித்திரம் நீடிக்க,
தலைமுறைகள் தடைதாண்டிப்பயணிக்க ஓய்வுகளற்று உழைத்தபடியே நீடிக்கிறான் உழவன்.
சவால்களை சரிக்குசரியாய் சந்தித்து அதற்கென்று புதிதான பாதைகளை தருவித்து,
சமாதானங்களில்லாமல் தன்னிறைவை நோக்கி தளராமல் பயணித்து,
தனதான புதியபாதையை புடம்போட்டு பேணிக்காக்கிறான் துணைகள் பெரிதாய் இல்லாமல்,
உலகமே பெருமைகொள்வோம் உழவனால்,பெருமைப்படுத்துவோம் உழவனை.