இந்த புத்தகம், இதன் ஆசிரியர் மணிமாறன் அவர்கள் 60 வருட வாழ்க்கையில் அவர் பார்த்த, படித்த மற்றும் கேட்ட ஆன்மீக அனுபவங்களை தொகுத்து இந்த “வாழ்வியல் ஆன்மிகம்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.அதை 30 அத்தியாயங்களில் எல்லோரும் புரிந்து கொள்ளுபடி மிகவும் எளிமையாக எழுதியிருக்கிறார். அவரின் கருத்துப்படி, ஆன்மிகம் எவரெஸ்ட் சிகரம் ஏறுவது போல ஒரு கடினமான செயல் அல்ல. விழிப்புணர்வுடன் வாழ்ந்து, மன சாந்தி தேடும் வழி.