மு. இக்பால் அகமது பரந்த வாசிப்பு அனுபவம் வாய்ந்தவர் என்பதுடன் வரலாறு, அரசியல், இசை, திரைப்படம், பயணம் ஆகிய தளங்களில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டும் இருக்கின்றார். பயணங்களின் காதலர் என்பதால் பரந்து பட்ட ரசனையும் எதையும் குதூகலமாகப் பார்க்கும் பார்வையும் வாய்க்கப்பெற்றவர். நான்கு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இந்த நூல் ஒரு கதம்பமாலை. பூக்களின் நிறம், மணம் ஆகியவை மாறுபடலாம், ஆனால் அத்தனை பூக்களும் இணைந்து பேரழகு பொருந்திய ஒரு மாலையாய் மணம் வீசுகின்றன.
அவரது வாசிப்பு, பயணம், பார்வை என எல்லாமாக சேர்ந்து புதிய பார்வையில் அவர் பதிவு செய்த கட்டுரைகளின் இத்தொகுப்பு, கட்டுரை இலக்கியத்திற்கு கிடைத்த புதிய வரவு. வாசிக்கும் ஒவ்வொருவரும் இக்கட்டுரைகளில் எங்கேயோ ஓரிடத்தில் தங்களை அடையாளம் காண்பார்கள் என்று உறுதியாக சொல்கின்றார்.