வண்ணத்துப்பூச்சிகள், இது என்னை எழுத்துலகில் அறிமுகம் செய்யும் முதல் நூலாகும்.மனித வாழ்க்கையை எவனொருவனாலும் நிர்ணயித்து கூறமுடியாது. ஆனால்
நான் இந்த நூலின் மூலம் மனிதனின் வாழ்க்கையை பற்றி கூற முயன்றுள்ளேன். காதல் என்ற வார்த்தை பல யுகங்கள் கடந்தும் காற்றை போல் மனிதன் உடலினுள் கலந்து பயணிக்கிறது. காதல், புரட்சி,இயற்கை,தாய்மை,பெண்மை, தனிமை,உழைப்பு, என்று பல வடிவங்களில் பொன்மொழிகளை
படைத்துள்ளேன்.இந்த நூலின் தாக்கம் மக்களிடையே எப்படி இருக்குமென்று தெரியவில்லை.இருத்தாலும் என் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். வாழ்க்கையில் நாம் தேடினால் கிடைக்காமல் போவதும் உண்டு.தேடாமலேயே கிடைப்பதும் உண்டு..எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி
தன் அன்பை பகிரும் தாய் தான் அனுபவிக்கும் துயரங்களும் , இயற்கை அன்னை
பற்றியும் தந்தை அன்பு பற்றியும் என பல விதமான கருத்துக்கள்... இந்நூலில் அடங்கியுள்ளது....
நெஞ்சை உருக்கும் புரட்சி வரிகள் ,மனம் காயப்படும் போது ஏற்படும் தனிமை இதைபற்றியும் விளக்கியுள்ளேன்..
இதை படித்த பின் இதன்படியே பின்பற்றுங்கள் என்று கூற மாட்டேன்.இதன்படி நடக்க முயற்சியாவது செய்யுங்கள்..
ஏனென்றால் நம்மில் சிலபேர் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதில்லை....சில பேர் சூழ்நிலையின் காரணமாக கூட இந்த
நிலைக்கு தல்லப்படுகின்றனர்....... இப்படிப்பட்ட தருணத்தில் என் புத்தகத்தை தேர்வு செய்து படித்துகொண்டிருக்கும் , படிக்கபோகும் நல்ல உள்ளங்களுக்கு என் பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.....மேலும் இந்நூலிற்கு
பேராதரவு அளித்து மேலும் மேலும் புத்தகங்கள் படைக்க
உறுதுணையாக இருப்பவர்களுக்கும் எனது நன்றிகளை
கூறிக்கொள்கிறேன்........
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners