விடாத மழையாய்
தொடரும் தின நிகழ்வுகளை,
மூடாத மனக்குடையில்
பட்டுத்தெறிக்கும்
உணர்வுத் துளிகளாக்கும்,
என் கவிதைப் பூங்காவனம்
நீங்கள்
சொல்ல மறந்தக் கதைகளை
சொல்ல முடியா நிஜங்களை
மலரும் நினைவுகளாய்,
நம் மன உணர்வுகளுக்கான
சங்கமமாய்
உங்கள் மடியிருத்தும்.
இது
வெறும்
தூறலாய் முடியும்
மழையல்ல.