விலைக்கு ஒரு வானவில்
மிதிலா, டிவி சேனல் ஒன்றில் பணியாற்றும் ஒரு மிக துணிச்சலான மற்றும் நேர்மையான பெண்.
அவள் ஒரு நிகழ்ச்சி தயாரிப்புக்காக தன் குழுவினருடன் பெங்களூருக்கு செல்கிறாள்.
அந்த பயணமும் அந்த நிகழ்ச்சிக்கான கருப்பொருளும் மிதிலாவின் வாழ்க்கையின் போக்கையே மாற்றும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.
போகும் இடத்தில் எதிர்பாராத நட்பு.அதனால், வரும் அடுக்கடுக்கான அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், சூழ்ச்சிகள் அவளை நிலைகுலைய வைக்கின்றன. இருந்தாலும்... தைரியமாக எதிர்த்து நிற்கிறாள்... போராடுகிறாள். ஆனால்,வெற்றி பெறுகிறாளா?
இந்த கதை படிக்கும் உங்களுக்கு மிதிலா கதாபாத்திரத்தின் எதையும் தட்டிக் கேட்கும் துணிச்சல் கொஞ்சமாவது ஒட்டிக்கொள்வது நிச்சயம்.
கங்கை இங்கே திரும்புகிறது
ஒரு ரயில் பயணத்தில் நிவேதனும் ஹமீதும் பரிச்சயம் ஆகிறார்கள். அதே வேகத்தில் ஒரு அற்ப விஷயத்தில் எதிரும் புதிருமாக மாறுகிறார்கள்.
பயணம் நீளும் போது,ஒரு எதிர்பாராத சம்பவம்...
பயணிப்பவர்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கிறது. கண்டிப்பாக உங்களையும் உலுக்கி எடுக்கும்.
அங்கிருந்து கதை வேறு திசையில் பயணிக்கிறது.
அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் இளகிய இதயமுள்ளவர்களின்
மனதை நெகிழவும் வைக்கும், கண்ணீர் கசியவும் வைக்கும்.
வாழ்க்கையில்,
சில கேள்விகளுக்கு பதில் என்றுமே கிடைக்காது.
அதுபோன்ற கேள்விகளை இந்த கதையில் எதிர்ப்பார்க்கலாம். விடை கிடைக்குமா...என்றால் வாய்ப்பிருக்கிறது என்றே சொல்லலாம்.
ஒன்றுமட்டும் நிச்சயம் இதில் வரும் நிவேதனையும் ஹமீதையும்
நீங்கள்
மறக்க வெகுநாளாகும்.