Share this book with your friends

9.81 m/sec 2 Uchikkal / 9.81 m/sec 2 உச்சிக்கல்

Author Name: Shanmugam Selvakumar | Format: Paperback | Genre : Arts, Photography & Design | Other Details

உச்சிக்கல்லினுள் உறங்கும் உண்மைகளை தட்டி எழுப்ப மிகவும் காலம் தாழ்த்தியதால், அறிவியல் உச்சத்தில் இருந்த சோழ தேசமே! நீ முற்றிலும் இழந்தது மிக மிக அதிகம் !

இருப்பினும் “9.81 m/sec2 உச்சிக்கல்” என்ற இந்த ஆய்வு கட்டுரையில் தட்டி எழுப்பப்பட்ட அறிவியல் உண்மைகளால் நமது தமிழ் மண்ணை உலகம் இனி சற்று உற்றுப் பார்க்கும்! தஞ்சையின் புகழ் விண்ணை தொட்டுப் பார்க்கும்!

இராஜராஜ சோழன்…

மெய்ப்பொருள் காண்பதே அறிவு

காலம் காலமாக தஞ்சை பெரிய கோவிலை சுற்றி வலம் வரும் மைய மர்மங்களுக்கான ஆழ்ந்த அறிவியல் தீர்வுகளை தன்னகத்தே ஆழமாகப் புதைத்து வைத்துள்ள பெரிய கோவில் விமானம், தமிழர்களின் மறைக்கப்பட்ட அறிவியல்  உச்சத்தின் மேன்மைகளை அறிவார்வமுள்ள மனிதர்களுக்கு ஆணித்தரமாக வெளிப்படுத்த ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக காத்துக் கொண்டிருக்கிறது!

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 555

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

சண்முகம் செல்வகுமார்

சண்முகம் செல்வகுமார் திருச்சிக்கு அருகில் திருவானைக்காவல் என்ற ஊரில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது ஆரம்ப நிலை பொறியியல் படிப்பை திருச்சி சேஷ சாயி கல்லூரியில் தொடங்கி, மேல்நிலைப் படிப்பை கிண்டி பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று சிவில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்.

ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமான அமைப்பிற்குள் புதைந்துள்ள அறிவியல் மற்றும் பொறியியல் ரகசியங்களை கண்டறிய முழு நேர ஆராய்ச்சி செய்து மறைந்துள்ள மர்மங்களுக்கு விடை காண தன்னை முழுவதுமாக ஈடுபடுவதற்கு முன், கடந்த 30 வருடங்களுக்கு மேல் லார்சன் & டூப்ரோ என்ற பன்னாட்டு கட்டுமான நிறுவனத்தில் பல பதவிகளில் பொறுப்புகள் வகித்தவர். நிறுவனத்தின் முன்னணி பதவிகளை ஏற்றுக்கொண்டு நெருக்கடியான மற்றும் சவாலான கட்டுமான திட்டங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வகுத்து முடிப்பதில் தலைமை தாங்கி மிகுந்த நிபுணத்துவத்துடன் செயல்படுத்தியவர்.

Read More...

Achievements

+11 more
View All