Share this book with your friends

Beautiful Women Around Me / என்னைச் சுற்றிலும் அழகிகள்

Author Name: Vijay Raj | Format: Paperback | Genre : Poetry | Other Details

"இன்னும் எதற்காக பெண்ணியம் பேசிக்கொண்டு? பெண்கள் இப்போதெல்லாம் படித்து, பெரிய பணிகளில் திறம்பட செயல்படுகிறார்களே" என்ற கேள்வி படித்தறிந்த சமூகத்திற்கு எழுவதுண்டு. கனிவான ஆண்களா? இல்லை முரட்டு ஆண்களா (rugged boys) என்ற பட்டிமன்றம் இன்னும் அரங்கேறிக் கொண்டு தானே இருக்கின்றன. மணப்பெண் கோலத்தில் இன்னும் தேர்வுகள் எழுதப்பட்டுக் கொண்டு தானே இருக்கின்றன. பட்டவர்த்தனமான அடக்குமுறைகள் இன்று பட்டும் படாத அடக்குமுறைகளாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கடைசிப் பெண் கரையேறும் வரை பேசித்தானே ஆக வேண்டும் பெண்ணியத்தை.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விஜய் ராஜ்

விஜய் ராஜ் மதுரைக்கு அருகில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) எனும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். திருப்புவனம் பேரூராட்சியின் கீழ் தான் கீழடி அமைந்துள்ளது என்பது கூடுதல் துணுக்கு. தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்து, இளங்கலை பொறியியல் படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரியில் முடித்தார். பிறகு குஜராத் மாநிலம் காந்திநகரில் முதுகலை மேலாண்மை படிப்பை முடித்தார். தற்போது அவர் பொதுத்துறை எண்ணை நிறுவனம் ஒன்றில் மூத்த மேலாளராக பணியாற்றி வருகிறார். படிப்பிற்காகவும், வேலை காரணமாகவும் இந்தியா வின் பல இடங்களுக்கு சென்றுள்ளார். சில காலங்கள் குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் வசித்தவர். பள்ளிப் பருவம் தொட்டு, தமிழ் நாடகம், தமிழ் பேச்சில் அதிக ஈடுபாடு கொண்டவர். தற்போது அவர் கோவை மாநகரில் வசித்து வருகிறார். இவர் பழக எளிமையானவர், அதிகம் பேசாது பிறர் கூறும் கருத்துக்களை நிதானமாக கேட்கக் கூடியவர். விளையாட்டு, நடனம் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவர். புத்தகங்கள் படிப்பது இவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு. இவர் எழுத்து வட்டத்திற்கு புது வரவு. கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதில் அதீத நாட்டம் கொண்டவர்.

Read More...

Achievements