வாழ்நாளில் அக்காவை தவிர வேறு உறவில்லாமல் உறங்கும் சந்தோசிற்கு மறுநாள் அக்கா இல்லாத செய்தி காதில் விழுகிறது. நேசித்த ஒரு உறவு நம்முடன் இல்லாத வலியையும், தன் காலை இழந்து தவிக்கும் சந்தோசின் வாழ்வு எவ்வாறு சந்தோசம் பிறந்தது.
மற்றும் சந்தோஸ் போல் வலிகளை இதயத்தில் சுமக்கும் சில மனிதர்களின் வலியையும், உணர்வுகளையும் இக்கதை தெளிவாக எடுத்துரைக்கும்.
வலிகள் எல்லா உயிர்களுக்கும் ஒன்றே என்பார்கள். எல்லா உயிர்களின் வலியை காட்சி படுத்தும் நாம், காணொளியில் காணும் நாம், இன்னும் நிலத்தில் கிடைக்கும் ஒரு ஓரத்தில் உறங்கும் மனிதர்களின் வலியை வலியாக உணராமல் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
குறையுள்ள மனிதர்களை எவ்வாறு இச்சமூகம் பார்க்கிறது. நம் வாழ்நாளில் கவனித்தும் மறந்த சில நபர்களின் வாழ்வை இக்கதை உங்கள் கண்முன் நிறுத்தும் என நம்புகிறேன்.