தூய அன்னை சாரதாமணி சென்ற நூற்றாண்டில்அவதரித்த மாபெரும் தவச்சீலர். பரப்பிரம்மமும், தவச்சீலரும், யோகேசுவரனும், ஞானியும், அவதாரபுருடருமான ஸ்ரீ இராமகிருட்டிண பரமஹம்ஸருக்குப் பத்தினியாகி அவருடைய சாதனைகளுக்குப் பக்கபலமாக இருந்து அனேகவிதத்தும் உதவி புரிந்து வாழ்ந்திருந்தவர். பதியின் கட்டளையைப் பின்பற்றி அவர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவு செய்ய முயன்றவர். அநேக மக்களுக்கு மந்திரோபதேசம் செய்துவைத்து அவர்களுடைய வாழ்வின் இலட்சியங்களை எய்த அடிகோலியவர். வறியவர்களுக்கும், நலிந்தவர்களுக்கும், பெண்களுக்கும் ஆதரவாக இருந்து அவர்களுடைய அநேக இன்னல்களைத் தீர்த்தவர்.
இராமகிருஷ்ண மடத்தாருக்கு வழிகாட்டியாக இருந்து அளப்பரிய தொண்டு செய்தவர். சுவாமி விவேகானந்தர் விட்டுச் சென்ற பணிகளை மடத்தார் நிறைவு செய்ய தேவையான வழிகாட்டியாக இருந்தவர். சுற்றத்தினர் அநேக தொல்லை கொடுத்தபோதும் பொறுமை இழக்காது, பண்பும் தருமமும் கடைப்பிடித்தது, அவர்களுக்கு பணயுதவி புரிந்தவர். தேவையானபோது அற்புதங்கள் புரிந்து நின்றவர். கொலை கொள்ளை செய்யுங்கள்வருக்குங் கூட அனுகிரகம் செய்து அவர்களின் மனதையும், வாழ்க்கை முறையையும் மாற்றியமைத்தவர். வெள்ளைக்காரப் பெண்களுக்கும் வழிகாட்டியாக இருந்து அவர்களின் ஆத்துமனுபவத்தில் முன்னேற உதவி புரிந்தவர். எவரையும் இகழ்ந்து பேசாதவர்.
அடியவர்களின், பாபங்களையும், அவர்களின் முந்தைய பிறவித் தீவினைகளையும் தாம் வாங்கிக்கொண்டு அநேக உடலுபாதைக்கு ஆளானவர். எவருடைய குற்றங்களையும் பாராதிருந்து, அவர்களை மன்னித்து, எல்லோருக்கும் நல்லதை மட்டுமே செய்தவர். இறுதி மூச்சுவரை சேவை, பணிவு, பண்பு, அடக்கம், பொறுமை, மந்திரோபதேசம் போதித்து அதன்படியே வாழ்ந்து காட்டி நின்றவர்.
ஆதரிச, இலட்சியமகளாய், சகோதரியாய், பத்தினியாய், குருவாய் மற்றும் தாயாய் அறுபத்தாறாண்டுகள் வாழ்ந்து அனேக தொண்டாற்றியவர். பாரதநாடு செய்த புண்ணியத்தால் இப்பேற்பட்ட மகான் அவதரித்திருக்கிறார்
தூய அன்னை சாரதாதேவிவாழ்க! இராமகிருட்டிணர்வாழ்க! சுவாமி விவேகானந்தர் வாழ்க!
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners