இந்த புத்தகம் ஒரு மனிதரின் வாழ்வில் வெற்றியடைய தேவையான குணங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி கூறுகிறது.
மனிதருக்கு தேவையான ஒவ்வொரு காரியத்தையும் உருவாக்க எப்படிப்பட்ட குணங்களை அவன் கொண்டிருக்க வேண்டும் அல்லது வளர்த்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பாரம்பரியமும்,அறிவியலுமே ஒரு மனித சமூகத்தின் வளர்ச்சியை நிர்ணயம் செய்கிறது. நம் தமிழ் சமூக வளர்ச்சியில் இவை இரண்டும் பின்னி பிணைந்துள்ளது.அவற்றை புரிந்து கொண்டு வாழ ஒவ்வொருவருக்கும் இந்த புத்தகம் உதவி கரமாக இருக்கும் என்பது உறுதி.
திரு.ஆ.தியோடர் ராயன் அவர்கள் திரு.S.S.ஆரோக்கியசாமி மற்றும் P.N.கமலம் அவர்களின் மூன்றாவது மகனாக பிறந்தார். சொந்த கிராமமான கருங்குளத்தில் ஆரம்ப கல்வி பயின்றார்.தனது பட்டப்படிப்பை திருச்சியிலும் மேற்படிப்பை சென்னையிலும் முடித்தார்.
அதன் பிறகு பல்வேறு துறைகளில் வேலை செய்துவிட்டு பணி நிமித்தமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சென்று சில ஆண்டுகள் வேலை செய்து விட்டு தாய்நாடு திரும்பினார்.
தனது அனுபவங்கள் மற்றும் எண்ணங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இது அவருடைய இரண்டாவது புத்தகம் ஆகும்.