காந்தியின் தனிச்செயலராக அவரது கடைசி காலத்திலிருந்த கல்யாணம் எனும் தமிழரருடனான உரையாடலை அடிப்படையாகக் கொண்டு எம். என் காரசேரி மலையாளத்தில் எழுதிய நூலை 'காந்தியின் சாட்சி' எனும் தலைப்பில் குமரி. எஸ். நீலகண்டன் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். காந்தியின் மரணம் பற்றிய இறுதி அத்தியாயம் அமைதியின்மையை ஏற்படுத்துகிறது.