Share this book with your friends

Ithu Namma Velanmai / இது நம்ம வேளாண்மை

Author Name: Agri. Dr. Y. Rajakumar | Format: Paperback | Genre : Others | Other Details

இவ்வுலகில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாய முறைகளை பின்பற்றி வந்த நாம், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இரசாயன விவசாயத்திற்கு பெருமளவில் மாறிப்போனதால் பல்வேறு அபாய நோய்களுக்கும், ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் ஆளாகி வருகிறோம். நாம் வாழும் பூமியை சிறிதும் சிதைக்காமல் சீரழிக்காமல் சிறப்பாக விவசாயம் செய்வதற்கு நஞ்சில்லா வேளாண்மை முறைகள் நமக்கிருக்கின்றன. மனித நலன் நம் நாட்டின் முக்கிய குறிக்கோளாக கருதப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், மனித நலன்களை பேணுவதற்கு நஞ்சற்ற தரமான உணவினை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியது அத்தியாவசிய கடமையாகிறது. இதனை வலியுறுத்தி நஞ்சில்லா விவசாய முறைகளை எல்லோரும் எளிதில் கடைபிடிக்கும் விதத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

நமது நாட்டு மக்களிடையே நஞ்சில்லா வேளாண்மை குறித்த விழிப்புணர்வு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதோடு நஞ்சில்லா விளைபொருட்களின் தேவை சர்வதேச சந்தையில் மிகவும் பெருகிவருகிறது. ஆகவே நஞ்சில்லா விவசாயத்தை மேற்கொள்ளுவது மிகவும் அவசியமாகத் தெரிகிறது. இந்த மாற்று விவசாய முறை நமது நீடித்த நிலைத்த விவசாய வளர்ச்சிக்கு உத்திரவாதம் தருகிறது. நமது மண்ணுக்கு வரம்பு மீறி பரிமாறப்பட்ட இரசாயன விருந்துகளினால் மண் மலடாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவற்றைச் சரிசெய்ய நஞ்சில்லா வேளாண்மை தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அவை அனைத்தும் இந்நூலில் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன. இனிமேல் இயற்கையோடு கரம் கோர்த்து நஞ்சில்லா தொழில்நுட்பத்தில் வேளாண்மை செய்ய இந்நூல் நிச்சயம் உதவும்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

Agri. Dr. ஒய். இராஜகுமார்

நூல் ஆசிரியர் பசுமைசாம்பியன் அக்ரி டாக்டர் ஒய். இராஜகுமார் அவர்கள் 1955-ஆம் ஆண்டு மேய் மாதம் 13-ம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை கிராமத்தில் திரு. ஏசுதாஸ், திருமதி. கமலபாய் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தார். திருமதி. ஷாந்தி என்பவரை வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்ட இவருக்கு வினோத் ராஜா என்ற மகனும் ஜில்னா ஜெரிக்ஸ் என்ற மகளும் உண்டு.

இவர் தனது ஆரம்ப கல்வியை அரசு தொடக்கப்பள்ளி தட்டான்விளையிலும், உயர்நிலைக் கல்வியை கன்கார்டியா மேனிலைப் பள்ளி பூட்டேற்றியிலும், தாவரவியல் பட்டப்படிப்பை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியிலும், வேளாண்மை பட்டப்படிப்பை உத்திரபிரதேசம் அலகபாத்திலும், இளங்கலை சட்டவியல் மற்றும் முதுகலை சமூகவியல் பட்டப் படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலமும் முடித்தார்.

இவர் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை, விதைசான்றுத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வேளாண்மைத் துணை இயக்குநராக பணிநிறைவு பெற்றவர். அதோடு கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா என்னும் பசுமைப் பேரியக்கத்தை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்டு வருபவர். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் விவசாயம் சார்ந்த 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டவர். எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் உள்ள இவர் பசுமைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.

தொடர்புக்கு : அக்ரி டாக்டர் ஒய். இராஜகுமார்.

அலைபேசி :9443265003

Read More...

Achievements

+5 more
View All

Similar Books See More